வேலூா்:சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு குடியாத்தம் நோக்கி வந்த வந்த அரசுப் பேருந்து, சேண்பாக்கம் ரயில்வே பாலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசுப் பேருந்து குடியாத்தம் நோக்கிச் சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுநா் பிரகாஷ் (41) ஓட்டி வந்துள்ளார். நடத்துநராக ரமேஷ் (49) இருந்துள்ளார். இந்நிலையில், பேருந்து வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்காக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தை சுற்றிக் கொண்டு சென்றுள்ளது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி உள்ளது. இதில், இடிபாடுகளுக்குள் பிரகாஷ், ரமேஷ் மற்றும் முரளி என்ற பயணி ஆகியோர் சிக்கிக் கொண்டனர். மேலும், பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.