தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய ஓய்வூதிய திட்டம் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 அரசு ஊழியர்கள் கைது! - vellore latest news

வேலூர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு இரு வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 32  அரசு ஊழியர்கள்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 32 அரசு ஊழியர்கள்

By

Published : Feb 2, 2021, 10:13 PM IST

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய முறையிலான ஓய்வு ஊதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டியும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வரும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பெண்கள் உள்ளிட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details