தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டென்டல் டெக்னீசியன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை! - டென்டல் டெக்னீசியன்

வேலூர்: டென்டல் டெக்னீசியன் வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை
கொள்ளை

By

Published : Nov 9, 2020, 8:46 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜ கணபதி நகரில் வசித்துவரும் டென்டல் டெக்னீசியன் கோபி தனது குடும்பத்துடன் இன்று (நவ. 09) வெளியே சென்றிருந்தார். பிறது திரும்பி வந்துபார்க்கும்போது வீட்டின் பின்புற கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு கோபி உள்ளே சென்று பீரோவைத் திறந்துபார்த்தபோது 8 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இது குறித்து குடியாத்தம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் திருட்டு: இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details