வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அமுதா (55). இவர் அதே பகுதியில் விறகு கடை வைத்துள்ளார். 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடையில் இருந்தபோது, வேலூர் மாவட்டம் தாமரைக்குளம் தெருவைச் சேர்ந்த முகமது கலில் (43) என்பவர் விறகு கடைக்கு வந்து திடீரென அமுதாவை மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றார்.
இதுகுறித்து அமுதா வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது.