தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் 250 பவுன் நகை கொள்ளை சம்பவம்: 110 சவரன் தங்க நகை அதிரடியாக மீட்பு - vellore district news

வேலூர்: பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ள சம்பவத்தில் 110 சவரன் தங்க நகைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

110 சவரன் தங்க நகை அதிரடியாக மீட்பு
110 சவரன் தங்க நகை அதிரடியாக மீட்பு

By

Published : Dec 8, 2020, 8:16 PM IST

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அம்மா பிரியாணி என்ற பிரபல பிரியாணி கடை நடத்தி வருபவர் மோகன் (60). இவர் நவம்பர் 15ஆம் தேதி முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மகன் நவம்பர் 22 ஆம் தேதி விடியற்காலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார் ஆகியோர் மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டனர்.

அவர்கள் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் சில நபர்களிடமிருந்து 110 சவரன் தங்க நகைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 250 பவுன் நகை, 2 லட்சம் பணம்.. சிசிடிவி கேமரா ஒயர்கள் அறுப்பு

ABOUT THE AUTHOR

...view details