தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘உள்ளாட்சித் தேர்தல் நடந்தால்தான் கிராமங்கள் பயனடையும்’ - ஜி.கே. வாசன் - ஜி.கே. வாசன் செய்தியாளர் சந்திப்பு

வேலூர்: கிராம ஊராட்சிகள்தான் பஞ்சாயத்துகளின் அடித்தளம் என்றும், தேர்தல் நடைபெற்றால் கிராமங்கள் பயனடையும் எனவும் தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

GK Vasan
GK Vasan

By

Published : Dec 10, 2019, 3:34 PM IST

உள்ளாட்சித் தேர்தல் டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகள்தான் பஞ்சாயத்தின் அடித்தளம். இதற்கான முதற்கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்தல் நடக்குமேயானல் கிராமம், பஞ்சாயத்து, குக்கிராமங்கள் எல்லாம் பயனடையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அதனடைப்படையிலேயே ஆளுகின்ற அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். மறுபுறம் எதிர்க்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்தத் தேர்தலை சந்திக்க தயங்குகின்றது.

GK Vasan Press Meet

மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த நினைப்பது என்பது தேர்தலை சந்திக்க திமுகவும் கூட்டணி கட்சிகளும் தயார் நிலையலேயே இல்லை என்பதைக் காட்டுகிறது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தமாகவின் பங்களிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘ஏற்கனவே அதிமுக கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். அந்த வகையில் முதல் நாளன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அழைத்து அவர்கள் பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தை வரும் நாட்களிலே மாவட்ட ரீதியாக தொடரும் வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் - திருமாவளவன் வழக்குத் தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details