தமிழ்நாடு

tamil nadu

விஷம் போல் ஏறும் சமையல் எரிவாயு விலை; பொதுமக்களிடம் கள ஆய்வு நடத்திய ஈடிவி பாரத்!

By

Published : Dec 26, 2020, 9:43 PM IST

Updated : Dec 28, 2020, 9:41 PM IST

வேலூர்: சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரசரவென உயர்ந்த சிலிண்டர் விலை
சரசரவென உயர்ந்த சிலிண்டர் விலை

இந்தியா கச்சா எண்ணெய்யை 98 டாலர்களுக்கு கடந்த 2014-ல் வாங்கியது. அப்போது பெட்ரோலியப் பொருள்களில் ஒன்றான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 420 ரூபாயாக இருந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை 40 டாலர்கள் உள்ளது. இருப்பினும் சிலிண்டரின் விலை 740 ரூபாயாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது இந்தியாவில் சிலிண்டரின் விலை குறைந்த விலைக்கும், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது சிலிண்டரின் விலை அதிகமான விலைக்கும் விற்கப்படுகிறது.

சரசரவென உயர்ந்த சிலிண்டர் விலை

இதற்கான காரணத்தை இன்று வரை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் சிலிண்டரின் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து ஏற்றத்துடனே நீடித்து வருகிறது. மிகவும் அத்தியாவசியப் பொருள்களின் ஒன்றான சிலிண்டரின் விலை ஏற்றத்தை எப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும், நடுத்தர மக்களும் சமாளிக்கின்றனர் என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு பொது மக்களிடையே கேட்டறிந்தது.

அதற்கு அவர்கள், "ஆரம்பத்தில் சிலிண்டர் 300 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ஏறக்குறைய 800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த 20 வருடத்தில் அபரிவிதமாக விலையாகும். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களில் தொடங்கி அடித்தட்டு மக்கள் வரை சிலிண்டர் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளோம். கரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழப்பால் வருமானம் இன்றி புலம்பித் தவித்தோம். இந்நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதத்திற்கு ஒரு முறை சிலிண்டரின் விலை உயர்வால் கறி, மீன் எடுத்து சாப்பிட கூட முடியாத நிலையில் உள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன்பு சிலிண்டருக்கு மாணியம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதுவும் முறையாக வருவதில்லை. இதுதொடர்பாக ஏஜென்டுகளிடம் கேட்டால், வங்கிக்கு சென்று ஆதார் கார்டை இணைக்க வேண்டும். அப்போது தான் பணம் வரும் என்று சாக்கு கூறி அழைய விடுகின்றனர்" என்றனர்.

நேரடியாக பொதுமக்களின் அன்றாட வாழ்வில் இத்தகைய பாதிப்பு என்றால், மறைமுகமாக உணவகங்களில் உணவின் விலை சரசரவென உயர்ந்துள்ளது. 60 ரூபாய்க்கு விற்பனையான மீல்ஸ் (Meals) 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்துவந்து வேலூரில் தங்கி பணியாற்றக்கூடிய மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

சிலிண்டரின் விலையை மாதம் ஒரு முறை நிர்ணயித்து வந்த மத்திய அரசு அடுத்த ஆண்டு முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து வேலூரில் பணியாற்றக்கூடிய வெளியூர் வாசிகள் தொரிவித்ததாவது, "தற்போது 100 ரூபாய்க்கு மீல்ஸ் (Meals) விற்பனையாகும்போதே எங்களால் வாங்கமுடியவில்லை. 15 நாள்களுக்கு ஒரு முறை சிலிண்டரின் விலையை உயர்த்தினால் நடுத்தர மக்களும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்" எனக் கூறினர்.

மத்திய, மாநில அரசுகள் சிலிண்டரின் விலையை 400 ரூபாய்க்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே பொது மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: வருமானம் 400, பைனான்ஸ் தொகை 300'- திணறும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்!

Last Updated : Dec 28, 2020, 9:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details