வேலூர்:தமிழகத்தில் நீர்நிலைகள் அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகளாலும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் வேலூரில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் வேண்டி பால் குடங்கள், மஞ்சள் சந்தன குடங்கள் எடுத்து வந்து பாலாற்றில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன.
தமிழகத்தில் நீர் நிலைகளை, ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல முன்னனி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது பாரதீய சன்னியாசிகள் கட்சி அதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர். பாலாற்றில் பல தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதால் மாசு அடைந்து நீரில் கலக்கும் குப்பைகளால் நீர் நுரையாக காட்சியளிக்கும் காட்சிகளை பார்த்துள்ளோம்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா அறக்கட்டளையினர் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்தினர். அதில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி புஷ்கரம், வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளை பாதுகாக்க புஷ்கர விழாக்கள் நடத்தினர். இதன் விளைவாக இந்த ஆறுகளில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது என தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க:தீட்சிதர்களை தாக்கியதாக அவதூறாக பதிவு:பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு சம்மன்!