வேலூர்: பாகாயம் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. நேற்று (ஜூலை. 20) இக்கோயில் வளாகத்தில் இருந்த ஒன்றரை அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட விநாயகர் கற்சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியுள்ளனர்.
இன்று (ஜூலை. 21) காலை பொதுமக்கள் கோயிலுக்கு வந்தபோது, விநாயகர் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.