வேலூர்: தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக வேலூர் மாவட்டம் அருகே உள்ள மலட்டாற்றில் நீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் மலட்டாறு அருகே பத்திரபல்லி, மசிகம், மதினாப்பள்ளி, மிட்டபல்லி, சாரங்கள், மாச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 200 ஏக்கரில்பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி வீணாகின.