வேலூர்:ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சிறைத்துறை மூலம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, நளினிக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேலூர் சிறைத்துறை எஸ்.பி., வேலூர் மருத்துவக் குழுவுக்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து இன்று (ஆகஸ்ட்.27) முழு உடல் பரிசோதனைக்காக வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.