தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் - சீர்மிகு திட்டத்தின் கீழ்

வேலூர்: புதிதாகக் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்றார்.

Foundation laying ceremony
Foundation laying ceremony

By

Published : Feb 13, 2020, 11:56 AM IST

சீர்மிகு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாநகராட்சியில் தற்போது உள்ள புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் 46.51 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், ”சீர்மிகு திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 9.25 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள பேருந்து நிலையம் 2042ஆம் ஆண்டு மக்கள்தொகை, போக்குவரத்துக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

மேலும், முடிந்த அளவுக்கு 6 மாத காலத்திற்குள் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டிமுடிக்க ஒப்பந்ததாரரிடம் கூறியுள்ளார். அதேபோல் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details