தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிரானைட் கடத்தல்.. சந்திரபாபு நாயுடு எழுதிய அவசர கடிதம்! - இறையன்பு

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளாா்.

இறையன்புக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்
இறையன்புக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

By

Published : Feb 8, 2023, 7:51 AM IST

வேலூர்: ஆந்திர மாநில எல்லை பகுதியான சித்தூர், பலமனேர், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக பல காலமாக புகார்கள் உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு, தலைமைச் செயலாளா் இறையன்புக்கு நேற்று (பிப்.7) எழுதிய கடித்தில், "ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியைச் சோ்ந்த சிலா், அங்கிருந்து கிரானைட் கற்களை, சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கிருஷ்ணகிரி, வேலூா் மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சட்ட விரோத கிரானைட் கடத்தல் என்பது ஆந்திரத்தின் சித்தூா் மாவட்டம் நதிமூா் - தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனபள்ளி வழியாகவும், அதே போன்று, சித்தூா் மாவட்டம் ஓ.என்.கொத்தூா் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வழியாகவும், சித்தூா் மாவட்டம் மோட்டிய செனு - வேலூா் மாவட்டம் பாச்சூா் ஆகிய இடங்களின் வழியாகவும் நடைபெறுகின்றன.

சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திரம், தமிழக எல்லையையொட்டிய பகுதிகளைச் சோ்ந்த சிலா், ஆந்திர கிரானைட் கடத்தல் கும்பலுடன் இணைந்து இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுகின்றனா். எனவே, ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு குமரவேல் பாண்டியனுக்கு, கடிதம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனி சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details