தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேர்ணாம்பட்டில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - மூவர் கைது! - rice seized in pernampat

வேலூர்: பேர்ணாம்பட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஐந்து டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் அது தொடர்பாக மூன்று பேரை கைதுசெய்தனர்.

5 டன் ரேசன் அரிசி பறிமுதல் - மூவர் கைது
5 டன் ரேசன் அரிசி பறிமுதல் - மூவர் கைது

By

Published : Mar 5, 2021, 4:50 PM IST

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு எல்.ஆர். நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக பேர்ணாம்பட்டு வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் வேலூர் வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமையிலான அலுவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்தச் சோதனையில் அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சுமார் ஐந்து டன் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவற்றைப் பறிமுதல்செய்த அலுவலர்கள் அது தொடர்பாக மூன்று பேரையும், இரண்டு வாகனங்களையும் பறிமுதல்செய்தனர். முதல்கட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்கள் சமீர் அகமது, அப்சல் பாஷா, அபூபக்கர் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க:விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details