தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2021, 9:25 AM IST

ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டி: பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!

காட்பாடி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நாய்க்குட்டியைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டது தொடர்பான காணொலி
வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டது தொடர்பான காணொலி

வேலூர்: ஆந்திராவில் பெய்யும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காட்பாடியிலிருந்து வேலூர் வரக்கூடிய பாலத்தின் கீழே தாய் மற்றும் குட்டி என இரண்டு நாய்கள் வெள்ள நீரின் மத்தியில் இருந்த புதருக்குள் சிக்கிக் கொண்டன.

இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் நாய்களைக் காப்பாற்றுவது கடினம் என்றனர். இதனையடுத்து நாய்க்குட்டிகளைக் காப்பாற்ற பொதுமக்களே களத்தில் இறங்கத் தயாராகினர்.

வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டியைப் பத்திரமாக மீட்டது தொடர்பான காணொலி

பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, நான்கு தீயணைப்புத் துறை வீரர்கள் நாய்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் தனது இடுப்பில் கயிற்றைக் கட்டி, புதர் பகுதியில் இருந்த நாய் குட்டியைப் பத்திரமாக மீட்டார்.

தாய் நாயானது தானாகவே நீந்தி பத்திரமாகக் கரை சேர்ந்தது. நாய்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், பொதுமக்களுக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க:Viluppuram Flood: காணாமல் போன தரைப்பாலம் - அவதியில் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details