வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சசிக்குமார் என்பவர் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் ஒருவர் பலி - fire cracker industry
வேலூர்: பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பட்டாசு தொழிற்சாலையில் ஊழியர்கள சரவணன் மற்றும் சதீஷ் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்தக் கோர விபத்தில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோளிங்கர் தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனைத்தொடர்ந்து விபத்தில் பலத்த தீக்காயமடைந்த சரவணனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.