திருப்பத்தூர் அடுத்த கல்நார்சம்பட்டி மலை கிராமத்தில் 2 வயதான பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. இதைப் பார்த்த நாய்கள் கூட்டம், புள்ளிமானை துரத்தியதில் அங்குள்ள விவசாயக் கிணற்றில் மான் தவறி விழுந்தது.
நாய்களுக்கு பயந்து கிணற்றில் விழுந்த மான் - உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை - deer rescued from well at thirupathur
திருப்பத்தூர்: கல்நார்சம்பட்டியில் கிணற்றில் விழுந்த பெண் புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
மான்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் கயிறுக் கட்டி இறங்கி புள்ளிமானை உயிருடன் மீட்டனர். அதன்பின், திருப்பத்தூர் வனத் துறையினர் ஜவ்வாது வனப்பகுதியில் புள்ளிமானை பத்திரமாக சேர்த்தனர்.
இதையும் படிங்க: ஹெல்மெட்டும் நாயும் - சென்னையை கலக்கிய பைக் ரைடர்!