திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(40). இவர் வெங்களாபுரம் பகுதியில் டைல்ஸ் மற்றும் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடி விட்டு குபேந்திரன் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நள்ளிரவில் கடையில் இருந்து அதிகளவில் புகை வருவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கும் மற்றும் உரிமையாளர் குபேந்திரனுக்கும் தகவல் கொடுத்தனர்.