வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோட்டை நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது இளைய மகள் திவிதா (19). இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் ஜோடி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கள் கிழமை முறையிட்டனர்.
அதனடிப்படையில் மேலப்பாடி காவல் துறையினர் நேற்று இருதரப்பு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினர். அப்போது திவிதாவின் தந்தை, ' தயவு செய்து என்னுடன் வந்து விடு ' என காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தந்தையை காலில் தள்ளிவிட்டு, திவிதா தனது காதலனுடன் சென்றுள்ளார்.