தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வு ஊதியம் வழங்குக' - thirupathur

வேலூர்: 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 4, 2019, 10:46 AM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகள்:

* கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெலக்கல்நத்தம், செட்டேரி அணைக்கு இணைப்பு கால்வாய் அமைத்து நாற்றம்பள்ளி திருப்பத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

* 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

* உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படும் நிலங்களுக்கு மாத வாடகை வழங்கிட வேண்டும்.

* மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details