தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு சார்பில், இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதற்குப் பதில் மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்துவது உள்ளிட்டவற்றை உள்டக்கிய மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இருப்பினும், இந்த மசோதா விவசாயிகளின் நலனைப் பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி, வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.