தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2019, 9:25 PM IST

ETV Bharat / state

நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு ஆலைகள்... கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள்

வேலூர்: நிலுவைத் தொகை வழங்காமல் கூட்டுறவு ஆலைகள் இழுத்தடிப்பதால் ஏமாற்றமடைந்த கரும்பு விவசாயிகள், விவசாயத்தை கைவிட்டு கட்டுமானத் தொழிலுக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Farmers become coolies because of vellore Co-operative mills do not pay the due amounts

தொழிற்சாலைகள் அதிகளவில் இல்லாத வேலூர் மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்துவருகிறது. நெல், மஞ்சள், கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை பிரதான விளைபொருளாக உள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் மூன்று லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் வேலூர் அம்முண்டி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய 3 இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு அரசு ஒரு டன் கரும்புக்கு இரண்டாயிரத்து 750 ரூபாய் விலை நிர்ணயித்துள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சரிவர கரும்பிற்கான தொகையை வழங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு விவசாயிகள் விவசாயம் செய்ய வழியில்லாமல் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். பலர் விவசாயத்தை கைவிட்டு கட்டிடத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு ஆலைகள்

வேலூர் மாவட்டத்திலுள்ள மூன்று சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு 38 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த தொகையை கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இருப்பினும் அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு விவசாயத்தை நம்பித்தான் எங்களது குடும்பம் உள்ளது. கூட்டுறவு ஆலைகள் நாங்கள் வழங்கும் கரும்பிற்கு சரிவர பணம் தருவதில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். ஒரு வருடம் கஷ்டப்பட்டு கரும்பு உற்பத்தி செய்து அதை விற்கும்போது பணம் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக எங்களுக்கு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து வேலூர் அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக் களத்திற்கு சென்ற அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் கிரேஸ்லால் ரிண்டிகி பச்சாவு, கரும்பு விவசாயிகளின் இடையூறுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தனக்கு மேலுள்ள உயர் அலுவலர்களிடம் முறையிடுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இந்திய ஆட்சிப்பணி பொருப்பில் உள்ள ஒரு அலுவலர் கரும்பு விவசாயிகளின் பிரச்னை குறித்து தெரியாது என அலட்சியமாக பதிலளித்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details