வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள புதூர் நாடு புங்கபட்டு மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (42). இவர் விவசாயம் செய்து வருகிறார். சுப்பிரமணி தனக்கு சொந்தமான நிலத்தில் அவரை செடியோடு கஞ்சா செடிகள் பயிரிட்டு விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வனத்துறையினர் சுப்பிரமணியின் நிலத்தில் ஆய்வு செய்தனர்.