தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களுக்கு நியாயம் வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி - தீக்குளிக்க முயற்சி

வேலூர்: வனச்சரகர் ஒருவரின் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

burn themselves

By

Published : May 30, 2019, 5:59 PM IST

வேலூர் மாவட்டம் ஆற்காடு புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வனத்துறையில் வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் வனச்சரகராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய ராஜா சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் ராஜாவின் மனைவி மாலதி மே மாதம் 6ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவர் ராஜா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனது கணவர் தனக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னையும் தனது இரண்டு மகன்களையும் கவனிப்பதில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலரை அணுகும்படி மாலதிக்கு பிற வன அலுவலர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாலதி புகார் அளித்தார். ஆனால் இதுவரை வனச்சரகர் ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் மாலதி மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் மாலதியின் மகன்கள் சச்சின், நெல்சன் ஆகியோரும் உடன் வந்தனர். அப்போது திடீரென மாலதியின் இரண்டு மகன்களும் மறைத்து வைத்திருந்த கெரசினை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதை கவனித்த காவலர்கள் ஓடிச் சென்று இரண்டு பேரிடமும் இருந்த கெரசின் கேனை பறித்தனர். இதற்கிடையில் மாலதியும் தான் மறைத்து வைத்திருந்த கெரசினை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

ஆனால் போலீசார் அவரிடமும் இருந்து கேனை பறித்தனர். போலீஸார் தடுத்தபோது மாலதியின் 2 மகன்களும் எங்களுக்கு நியாயம் வேண்டும், எங்களை வாழவிடுங்கள் அல்லது சாக விடுங்கள் என்று கண்ணீர் மல்க கூறிய சம்பவம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து 3 பேரையும் மீட்டு சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details