தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது - Tirupathur latest news

திருப்பத்தூர்: பல்லலப்பள்ளியில் பல ஆண்டுகளாக கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tirupathur
tirupathur

By

Published : Feb 13, 2020, 6:28 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் கோல்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், அருகிலுள்ள பல்லலப்பள்ளி பகுதியில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அனைத்து வகையான நோய்களுக்கும் அவர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அவர்மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் பல்லலப்பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அதில் அவர் முறையான மருத்துவம் படிக்காமலே மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்ததுள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்ட மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் அவர் போலி மருத்துவர் என கண்டறியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை மேற்கொண்ட போது

ABOUT THE AUTHOR

...view details