வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் சார்பில் பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.
வேலூரில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி - Exhibition on Traditional Foods at Vellore
வேலூர்: மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பாரம்பரிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
![வேலூரில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4454914-thumbnail-3x2-cats.jpg)
பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆட்சியர்
இந்த கண்காட்சியில் கேழ்வரகு, சாமை, திணை, கம்பு, சோளம், கோதுமை, பச்சைபயிறு, துவரை, உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அதிக சத்துக்களை தரும் காய்கறிகள் மற்றும் கனிகளும் இடம்பெற்றிருந்தன. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் ஆட்சியர்