வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் வேலூர் திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ’மாண்டஸ் புயல்’ முன்னெச்சரிக்கைக் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது எனவும், தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.