வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரம் - vellore news
வேலூர்: ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 783 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.
வேலூர்
By
Published : Mar 11, 2021, 6:00 PM IST
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று(மார்ச். 10) ரேண்டம் (Random) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர், காட்பாடி, அனைக்கட்டு, கேவிகுப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட கருவிகளின் எண்ணிக்கை பின்வருமாறு
தொகுதி
வாக்குச்சாவடிகள்
வாக்களிக்கும் கருவிகள்
கட்டுப்பாட்டு கருவிகள்
விவிபாட் கருவிகள்
காட்பாடி
349
419
419
450
வேலூர்
364
437
437
466
அனைக்கட்டு
351
421
421
453
கேவிகுப்பம்
311
373
373
401
குடியாத்தம்
401
490
490
506
மொத்தம்
1,783
2,140
2,140
2,296
அனைத்து கருவிகளும் லாரிகள் மூலம் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களுக்கு, தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டன.