தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: விநோத நோயால் அவதியுறும் நபருக்கு குவியும் உதவி! - Vellore

வேலூரில் விநோத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு திமுக பிரமுகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: விநோத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த உதவி!
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: விநோத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த உதவி!

By

Published : Nov 29, 2022, 1:40 PM IST

வேலூர்:அரியூர் ஜெகஜீவன்ராம் தெருவில் விரிசலடைந்த ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார், கணவரை இழந்த வளர்மதி. இவரின் 19 வயது மகன் சரண்சங்கீத், உடல் மற்றும் மனநல குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்த செய்தி நேற்று (நவ.28) ஈடிவி பாரத் செய்தியில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திமுக வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து எம்எல்ஏவின் அறிவுறுத்தலின்படி, இன்று பகுதிச் செயலாளர் ஆர்.கே.ஐயப்பன் தலைமையிலான திமுகவினர், சரண்சங்தீத்தின் வீட்டுக்குச் சென்று இரண்டு மாதத்திற்கான தேவையான அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை அவரது தாயாரிடம் வழங்கினர். அப்போது மண்டல குழு தலைவர் எஸ்.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:விநோத நோயால் துடிக்கும் வேலூர் சிறுவன்.. அரசிடம் மன்றாடும் ஏழைத்தாய்!

ABOUT THE AUTHOR

...view details