வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் காளைக்கு முதல் பரிசாக ரூபாய் 75,000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 50,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பங்கேற்ற காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டன.
வேலூரில் கோலாகலமாக நடைபெற்ற எருது விடும் விழா! - fight
வேலூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற எருது விடும் விழாவில் 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
எருது விடும் விழா
இவ்விழாவினை பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இவர்களை கட்டுப்படுத்த 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவில் பார்வையாளர்கள் சிலரும் காயமடைந்தனர்.