தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை': கமல்ஹாசன்

வேலூர்: விண்வெளி முதல் விவசாயம் வரை, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

MNM chief Kamal Haasan
கமல் ஹாசன்

By

Published : Jan 7, 2021, 7:23 AM IST

தமிழ்நாடு முழுவதும் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்காளர்களைச் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று (ஜன.6) வேலூரில் நடைபெற்ற பரப்புரையின் இறுதி கட்டமாக வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியினரை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,'வேலூரின் சிறப்பு சிப்பாய் புரட்சி. இது எழுச்சி கொண்ட மண். வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அதில் சிப்பாய் புரட்சி தோற்கக் காரணம், தலைவர்கள் தலை கொடுக்காததே. தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழ்நாட்டிற்காக வைத்துவிட்டேன்.
நீங்களும்(தொண்டர்கள்) வைத்தால் தான் தமிழ்நாட்டை மீட்க முடியும். உட்கார அல்ல, மக்கள் சேவை செய்யவே, நாம் நாற்காலியைப் பிடிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 'நீங்கள் எல்லோருமே தலைவர்கள். நான் உங்களை என் குடும்பமாக ஏற்றுக் கொண்டுள்ளேன். மக்கள் நீதி மய்யத்தில் மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். அது மற்ற எந்தக் கட்சியிலும் கிடையாது. வெற்றியை நோக்கி அற்புதமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது, தற்போது ஏளனம் செய்யப்படலாம். நாளை உலகம் நம்மைப் பாராட்டும்.

கமல்ஹாசன் பேசிய காணொலி

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி அரசு செலவில் நிர்ணயிக்கப்படும். அது இலவசம் அல்ல, அரசின் சொத்து, முதலீடு. அரசுக்கும், மக்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும். விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். சுற்றுச்சூழலைப் பற்றி பேசும் ஒரே கட்சி நாம்தான். பேசுவது மட்டும் அல்ல, அதற்கான திட்டத்தையும் வகுத்து வைத்துள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க:ரஜினிக்கு எதிராக போராடக் கூடாது: ரஜினி மக்கள் மன்றம்

ABOUT THE AUTHOR

...view details