வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கரோனா வார்டில் பணிபுரியும் பணியாளர்கள்! - அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனை கரோனா வார்டு
வேலூர்: அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கரோனா வார்டில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தங்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், கையுறை, கரோனா நோயாளிகளை பாதுகாப்பாக கையாள்வதற்காக வழங்கப்படும் பிபிஇ (PPE) உடை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீள நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து வரும் அரசு, வார்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உடையும் வழங்காதது, , அவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.