தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது
அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது

By

Published : Apr 2, 2021, 10:43 PM IST

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் தொகுதி வாரியாக பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.60 லட்சத்து 87 ஆயிரத்து 581 ரொக்க பணம், ரூ.15 லட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்பிலான பொருள்கள், ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்து 171 மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அமைச்சர் உதயகுமாருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு பணம்? காணொலி வைரல்

ABOUT THE AUTHOR

...view details