வேலூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு அருகே உள்ள பலமனேரி வனப்பகுதியைச் சேர்ந்தவர் செங்கல் ராயுடு (விவசாயி). இவருக்குச் சொந்தமான நிலத்தில் நேற்று இரவு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது, விவசாய நிலத்திற்குள் இருந்த மின்சாரக் கம்பி மேல் இருந்த மரக்கிளையை, யானை உடைக்க முற்படும் போது, யானை மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இன்று காலை வழக்கம் போல் நிலத்திற்கு வந்த செங்கல் ராயுடு யானை உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக பலமனேரி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.