வேலூர் மாவட்டம், கே.வி.(தனி) குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வந்த மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கரோனா உறுதி! - corona detail
வேலூர்: கே. வி.(தனி) குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![வேலூரில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கரோனா உறுதி! election official affected by corona in Vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:55:53:1619519153-tn-vlr-02-kv-kuppam-ro-covid-positive-img-scr-7209364-27042021152122-2704f-1619517082-798.jpg)
election official affected by corona in Vellore
இவர், தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் வரும் மே 2ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபட முடியாது என்பதால், கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு வேறு தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
விரைவில் தேர்தல் ஆணையம் அனுமதி கிடைத்தவுடன் கே. வி. குப்பம் (தனி) தொகுதிக்குப் புதிதாக தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.