வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் கோட்டையை கைப்பற்றப் போவது யார்? - vellore
வேலூர்: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி 8 மணிக்கு தொடங்குகிறது.
vellore
முதலில் ஆறு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, காலை 10 மணிக்கு மேல் முன்னிலை நிலவரம் தெரியவரும். இந்தத் தேர்தலில் 71.51 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.