தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 6ஆம் நடைபெறவுள்ளது. அதற்காக வேலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்கும் முறை குறித்தும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் தேர்தல் அலுவலர்கள், பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கமளித்து, மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.