தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது - vellore elderly man attacked public

வேலூர்: காட்பாடி அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு முயற்சி
சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு முயற்சி

By

Published : Aug 7, 2020, 3:56 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை ரோடு அருகேயுள்ள மௌனகுரு சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். தையல் தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களுக்கு தையல் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், ஜோசப் இன்று (ஆகஸ்ட் 7) கடைக்கு வந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் ஜோசப்புக்கு தர்மஅடி கொடுத்ததில், அவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் துறையினர், ஜோசப்பை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த பின்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை: சாதி பிரச்னையால் நேர்ந்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details