வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது பாலம் சீரமைக்கும் பணி முடிக்கப்பட்டு நேற்று முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பாலத்தின் மீது செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்கள் ஜூலை 4ஆம் தேதிக்கு பிறகு பாலத்தின் மீது செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
அதில், அந்த மேம்பாலம் நீண்ட நாள்களாக திறக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் என கூறி, வேலூர் மாவட்ட அதிமுக மாநகர செயலாளரான அப்பு தனது ஆதவரவாளர்களுடன் ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த அப்பு போலீசாரால் நேற்று (ஜூலை 1) கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சி தலைவரும், அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'காட்பாடி பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், நூதன முறையில் போராட்டம் நடத்திய வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் SRK அப்பு மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள இந்த விடியா திமுக அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்" பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்