தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துரைமுருகன் மகன் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்: வேலூர் சரக டிஐஜி - kathir anand

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று வேலூர் சரக டிஐஜி கூறினார்.

vellore DIG

By

Published : Apr 15, 2019, 4:52 PM IST

வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் சரக டிஐஜி வனிதா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'வேலூர் மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்த தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய 3456 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 347 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் இரண்டு வாக்குசாவடிகள் மிகவும் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் எந்த பிரச்சனையுமின்றி அச்சமில்லாமல் வாக்களிக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் 10 காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 2887 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 10 கம்பெனியை சேர்ந்த மத்திய துணை ராணுவ வீரர்கள், தமிழக சிறப்பு காவல்படை, பயிற்சி காவலர்கள் 196 பேர், முன்னாள் ராணுவத்தினர் 1500 பேர், ஊர்க்காவல் படை 400 பேர், ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்கள் 50 பேர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் 50 பேர் என மொத்தம் 5630 பேர் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

vellore DIG

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வேலூர் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்) மீது வருமானவரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதியிடம் அனுமதி வாங்கி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. அதுகுறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். முன்னெச்சரிக்கையாக வேலூரில் 362 ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து உள்ளோம். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 29 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ள Pollpoliceapp என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்துள்ளோம். வரும் 18ஆம் தேதி தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். யாரேனும் பொதுமக்களை மிரட்டி அல்லது தனிப்பட்ட நபருக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 0416-2258898 மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - 9498111101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details