தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளரை அறிமுகப்படுத்திய துரைமுருகன்...

உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்துவைத்தார்.

By

Published : Sep 26, 2021, 7:02 AM IST

துரைமுருகன்  வேட்பாளர் அறிமுகம்  வேட்பாளர்  உள்ளாட்சி தேர்தல்  உள்ளாட்சி தேர்தல் காட்பாடி வேட்பாளர்  duraimurugan  duraimurugan introduce candidate  local body election  candidate of local body election in katpadi
துரைமுருகன்

வேலூர்: உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்குள்பட்ட திமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று (செப் 25) காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எ.பி. நந்தகுமார், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேட்பாளர் அறிமுகம்

மருத்துவமனையினை துவங்குவதற்கு அனுமதி

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “சட்டப்பேரவை தேர்தல் முடிந்து உள்ளாட்சி தேர்தல் வந்திருக்கிறது. நான் அமைச்சராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் கிராமத்தில் ஆக வேண்டிய வேலைகளை செய்யக் கூடியவர்கள்தான் பஞ்சாயத்து யூனியனில் உள்ளவர்களும், கிராம தலைவர்களும். எனவே அவர்கள் சரியாக இருந்தால்தான் நாம் கொண்டு வருகிற திட்டம் சரியாக மக்களை சென்றடையும்.

நம்முடைய காட்பாடி தொகுதியில் இந்த ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இத்தொகுதியில் இதுவரையில் ஒரு அரசு கல்லூரி இல்லை அதை இந்த ஆண்டு கொண்டு வந்திருக்கின்றேன்.

அதேபோன்று ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர வேண்டும். அதற்காக முதற்கட்டமாக இந்த ஆண்டு 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையினை தொடங்குவதற்கு சட்டப்பேரவையில் அனுமதி பெற்றிருக்கின்றேன். விளையாட்டு மைதானமும் கட்டப்பட்டுள்ளது. எனவே இப்படிப்பட்ட திட்டங்கள் நான் கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றுகின்றவர்கள் பஞ்சாயத்து தலைவர்கள்.

வால் இல்லாமல் சண்டையிட முடியாது

என்னை எப்படி ஆதரித்தீர்களோ, அப்படியே இவர்களையும் ஆதரியுங்கள். என் கைவாளாக, போர்வாளாக இருக்கக்கூடியவர்கள் தான் இங்கே பஞ்சாயத்து யூனியன் தேர்தலில் வேட்பாளராக நிற்கிறார்கள்.

எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் வாள் இல்லாவிட்டால் சண்டையிட முடியாது, ஈட்டி இல்லாவிட்டால் எதிரியை தாக்க முடியாது அந்த வகையில் அரசின் நலத்திட்டங்கள் நம் தொகுதி மக்களுக்கு உடனே கிடைப்பதற்காக நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

நகரத்தில் இருக்கின்ற தோழர்கள் எல்லா கிராமத்திற்கும் செல்லுங்கள். நம்முடைய கிராமம் உங்களுக்கு தெரியாதது அல்ல. சென்று வாக்கு சேகரியுங்கள். காரணம், டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சித் தேர்தல் வருகிறது. எனவே கிராமத்து மக்கள் உங்களுக்கு உழைப்பு வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: கரோனா கால தடையும் தாண்டி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...

ABOUT THE AUTHOR

...view details