தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் - துரைமுருகன் - Tamilnadu assembly election

வேலூர்: திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ட்ஃப்ச
ட்ச

By

Published : Apr 6, 2021, 11:07 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா, பேத்தி செந்தாமரை ஆகியோருடன் காட்பாடியில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று(ஏப்ரல். 06) காலை 8.30 மணி அளவில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”எனக்கு மட்டுமல்ல திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

வாக்கு செலுத்தும் துரைமுருகன்

அதனைத் தொடர்ந்து, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்பாடி, கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்ய கோரி மனு அளித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது போன்ற பைத்தியக்கார கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details