தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி - wife kills husband

வேலூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி
குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி

By

Published : May 12, 2022, 7:35 AM IST

வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் குமரவேல் (55).இவரின் மனைவி கோமதி(48) குமரவேல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி மனைவியிடம் மகள்களிடமும் சண்டை போடுவதாகவும் சந்தேகப்பட்டு சித்திரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் 10-ம் தேதி நேற்று இரவு குடித்துவிட்டு மனைவி கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் முதலில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி கோமதியின் நெற்றியில் கழுத்தில் கிழித்ததாக சொல்லப்படுகிறது. இதில் கோமதி படுகாயமடைந்தார். சண்டையை தடுக்கச் சென்ற மகள் கையிலும் கத்தியால் லேசாக கிழித்துள்ளார் குமரவேல்.

இதனைத்தொடர்ந்து கோமதி கணவன் குமரவேல் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கழுத்தில் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த குமரவேல் மனைவி கோமதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் கை வைரிசை காட்டிய வேலூர் பாய்ஸ் கைது

ABOUT THE AUTHOR

...view details