வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர் மூலகொல்லை பகுதியில் உள்ள கல்குவாரியில் நேற்று (நவம்பர் 20) நண்பர்களுடன் மது அருந்திவிட்டு அங்கியிருந்த தண்ணீர் குட்டையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் சுரேஷ் குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே வேலூர் மாவட்ட தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் சுரேஷின் உடலை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரை தேடி உடல் கிடைக்கதால் இன்று (நவம்பர் 21) இரண்டாவது நாளாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் உதவியுடன் தீவிர தேடுதலுக்குப் பிறகு சுரேஷின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து சுரேஷின் உடலை சத்துவாச்சாரி காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.