தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மத்திய அரசால் தனி முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் லாபம் ஈட்ட தொடங்கிவிடுவார்கள்’ - வேலூரில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தினர்

வேலூரிலுள்ள அண்ணா கலையரங்கம் அருகே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 28, 2020, 7:54 PM IST

வேலூர்: விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சியினர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் இன்று (செப். 28) அண்ணா கலையரங்கம் அருகே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் பலவும் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பின. பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் இந்த ஆர்பாட்டத்தின் போது உரையாற்றினர்.

இதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது, "மத்திய அரசால் விவசாயிகளுக்கென்று கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள், முறைதவறி கொண்டுவரப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆனால், எவ்வித கருத்துக்கேட்புமின்றி அவசர கதியில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதை எதிர்த்துதான் அகாலி தளம் கட்சியின் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பதவி விளகினார். சில தினங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்றவற்றை இந்தியாவில் அத்தியாவசிய பொருள் கிடையாது என்று மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதனால், இவற்றை வருங்காளத்தில் பதுக்க நேரிடும். மேலும் தனி முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் இதன்மூலம் லாபம் ஈட்ட தொடங்கிவிடுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details