தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களிடம் "நெஞ்சுக்கு நீதி" படம் பார்க்க சொன்ன திமுக எம்எல்ஏ - vellore

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை "நெஞ்சுக்கு நீதி" படத்தை பார்க்க சொன்ன திமுக எம்எல்ஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள்

சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களிடம் "நெஞ்சுக்கு நீதி" படம் பார்க்க சொன்ன திமுக எம்எல்ஏ
சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களிடம் "நெஞ்சுக்கு நீதி" படம் பார்க்க சொன்ன திமுக எம்எல்ஏ

By

Published : May 24, 2022, 8:22 PM IST

வேலூர்: மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சுமார் 1,600-க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியம் 676 ரூபாய் என்பதற்கு பதில் 388 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும்.

பிஎஃப், இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படும் தொகை முறையாக அரசுக்கு செலுத்தப்படுவது இல்லை என்றும். எட்டு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 10 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

நேற்று வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சிலர் அங்கு கொடியுடன் வந்து கோஷங்களை எழுப்ப முற்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள். இது தங்களுக்கான பிரச்சனை என்றும் இதை அரசியலாக்காமல் வெளியேற வேண்டும் என கூறினர். இதற்கிடையில் அங்கிருந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.

இதனை தடுக்க காவல் துறையினர் முயற்சித்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, ஆகையால் நாம் தமிழர் கட்சியினர் சிலரை காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் பேசுகையில்,

இப்போதைக்கு வழங்கப்படும் ஊதியத்தை பெற்றுக்கொள்ளும்படியும் பிறகு பேசி தீர்வு காணப்படும் என கூறியதற்க்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்ததால், அப்படி என்றால் நீங்க இங்கேய இருங்க நாங்க ஒன்னும் பண்ண முடியாது. இது அதிமுக அரசு விட்ட ஒப்பந்தம். நாங்கள் புதிய ஒப்பந்தம் போடும் வரை காத்திருங்கள் என்றார்.

சம்பள உயர்வு கேட்டு போராடியவர்களிடம் "நெஞ்சுக்கு நீதி" படம் பார்க்க சொன்ன திமுக எம்எல்ஏ

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை "நெஞ்சுக்கு நீதி" படத்தை பார்க்கச் சொன்னார். காரணம் நெஞ்சுக்கு நீதி படம் உங்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது அதை நீங்க அவசியம் பாருங்க. தமிழக முதல்வரின் மகனே அந்த படத்தில் நடித்துள்ளார். இப்படி தமிழக முதல்வரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் உங்களுக்காக பாடுபடுகிறார்கள் என பேச்சினார்.

திமுக எம்எல்ஏ கார்த்திகேயனின் இந்த பேச்சு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மாநகராட்சி ஆடையர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:உதயநிதிக்கு பேனர் வைத்த காவலர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details