வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ’அதிமுகவை நிராகராப்போம்’ என்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தை திமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். இந்தக் கூட்டம் இன்று (டிச.27) ஏரந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தும் திமுகவினரை கைது செய்வது அரசாங்கத்தின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல். கிராம சபை என சொல்லக்கூடாது என சட்டம் எதுவும் கிடையாது. நாங்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் பேசுவது ஆளும் கட்சியினருக்குப் பொறுக்கவில்லை.