இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு முழு கல்வி செலவையும் திமுக ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அரசு செய்யவேண்டிய கடமையை எதிர்க்கட்சித் தலைவர் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தை கூட திமுக செய்த பிறகுதான் ஆட்சியாளர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்றால் ஸ்டாலின் வழியில் அரசு நடைபெறுகிறதா?.
'உதயநிதியை கைது செய்து அவரை ஹீரோவாக ஆக்கிவிட்டார்கள்' - துரைமுருகன் - திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
வேலூர்: உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அவரை ஹீரோவாக ஆக்கிவிட்டார்கள், இது சர்வாதிகார ஆட்சி வீழ்வதற்கான அர்த்தம் என்று, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய பின்னர் தான் இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் கையெழுத்திட்டார். அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை திமுக செய்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அவரை ஹீரோவாக ஆக்கிவிட்டார்கள். இது சர்வாதிகார ஆட்சி வீழ்வதற்கான அர்த்தம்" என்றார்.
அதைத் தொடர்ந்து, சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு செல்லும் வழியில் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்றதையும், உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், "மாயிமார் உடைத்தால் மண் குடம், மறுமகள் உடைத்தால் பொன் குடம்" என்றார்.