தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுபான்மையினர் ஆதரவு எப்போதும் திமுகவிற்குதான் - துரைமுருகன் - durai murugan

வேலூர்: சிறுபான்மையினர் அனைவருமே திமுகவிற்கு ஆதரவளிப்பார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

dmk celebrate their victory in vellore

By

Published : Aug 9, 2019, 4:36 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிந்தது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து பட்டாசு வெடித்து திமுகவினர் வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

துரைமுருகன் பேட்டி

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் "இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது சிறுபான்மையினர் அனைவருமே திமுகவிற்கு ஆதரவளிப்பார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது. இந்த வெற்றி சாதாரணமானதல்ல. ஸ்டாலின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஒரு அடையாளமாகதான் இந்த வெற்றியைப் பார்க்கிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details