தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி விடுமுறை நிறைவு; வேலூரிலிருந்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - special buses

Diwali Special buses from Vellore: தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பல்வேறு ஊருக்குத் திரும்பும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக வேலூரிலிருந்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

வேலூரிலிருந்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேலூரிலிருந்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 8:26 AM IST

வேலூர்: தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பொதுமக்கள் மீண்டும் தங்களது ஊர்களுக்குத் திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக, வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும், ஆன்மீகத் தலங்களுக்கும் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து, பொதுமக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை முதல் 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்களை மீண்டும் மேடை ஏற்ற முயற்சி: நடிகர் நாசர் தகவல்

வேலூரிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேலூரிலிருந்து, சென்னைக்கு 50 பேருந்துகளும், பெங்களூரு மார்க்கமாக கூடுதலாக 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், திருப்பத்தூர் மார்க்கத்தில் 20 சிறப்பு பேருந்துகளும், திருச்சி செல்லும் மார்க்கத்தில் 7 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக, அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சொந்த ஊர்களுக்குத் திரும்ப பேருந்து நிலையத்தில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பேருந்து நிலையங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வணியம்பாடி விபத்து மீட்பு பணியின் போது உயிரிழந்த காவலர் முரளி குடும்பத்திற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆறுதல்!

ABOUT THE AUTHOR

...view details